/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ப்ளஸ் 2 சான்றிதழ் பதிவு செய்ய திருச்சியில் 4 மையங்கள் துவக்கம்ப்ளஸ் 2 சான்றிதழ் பதிவு செய்ய திருச்சியில் 4 மையங்கள் துவக்கம்
ப்ளஸ் 2 சான்றிதழ் பதிவு செய்ய திருச்சியில் 4 மையங்கள் துவக்கம்
ப்ளஸ் 2 சான்றிதழ் பதிவு செய்ய திருச்சியில் 4 மையங்கள் துவக்கம்
ப்ளஸ் 2 சான்றிதழ் பதிவு செய்ய திருச்சியில் 4 மையங்கள் துவக்கம்
திருச்சி: "திருச்சி மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஆறு மையங்கள் செயல்படவுள்ளது' என கலெக்டர் சவுண்டையா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மேல்நிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மே 26ம் தேதி மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹிபர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்கும், திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கும் பதிவு பணி நடக்கிறது.
மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, துறையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் பதிவு பணி நடக்கிறது.எனவே அந்தந்த எல்லைக்குட்பட்ட மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட மையங்களில் பதிவு செய்யலாம்.
பதிவு செய்ய வரும் மாணவ, மாணவிகள் தங்களின் எஸ்.எஸ்.எல்.ஸி., மேல்நிலைக் கல்வி மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச்சான்று மற்றும் ரேஷன் கார்டு அசல் சான்றுகளை கொண்டு வர வேண்டும்.
ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் மேற்குறித்த சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டும். மாவட்டத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே மேற்குறித்த மையங்களில் பதிவு செய்ய இயலும், பதிவுப்பணிகள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.